Wednesday 9 May 2012

இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்......!

                                      பாகிஸ்தான் பிரதர் கிலானிக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது.பிரதமரின் மகன் என்று தெரிந்தும் காவல்த்துறை அவர் மேல் வழக்கு போடுகிறது.பாகிஸ்தான் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள நாடு.அப்படிப்பட்ட நாட்டில் கூட நீதித்துறையும், காவல்த்துறையும் சிறப்பாக செயல்படுகிறது.பாகிஸ்தானிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.

மிக பெரிய ஜனநாயக நாடான நம் இந்தியாவில் தவறு செய்யும் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளரை போலிசால் கைது செய்ய முடியாது.ஆனால் அமைதியாக போராடும் மக்களை கைது செய்து சித்திரவதை செய்வார்கள்.இந்தியாவில் காவல்த்துறையும்,உளவுத்துறையும் அரசியல்வாதிகளின் பிடியில் இருப்பதால் தான் நாடு ஆபத்தான நிலையில் உள்ளது.......!

இறந்த பின்பும் புகழ் குறையாத மகாத்மா....!



இறந்த பின்பும் புகழ் குறையாத தலைவர் நம் மகாத்மா....!

மகாத்மா காந்தியடிகளை கோட்சே சுட்டபோது அவர் உடம்பிலிருந்து இரத்தம் கீழே இருந்த புல்லில் விழுந்தன.அந்த புண்ணியவானின் உதிரம் படிந்த அந்த புல்லை இதுவரை பத்திரமாக லண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.சென்ற வாரம் அந்த புல்லை ஏலத்துக்கு விட்டனர்.ஒரு லட்சம் ரூபாய்க்கு அந்த புனிதப் புல்லை ஏலத்தில் எடுத்துள்ளனர்.

சமையல் செய்ய கற்றுக் கொடுத்த பிரபாகரன்....!

             

                                                    தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தன் வீரர்களுக்கு இரு விடயங்களை கட்டாயமாக சொல்லித்தருவார்.ஒன்று எப்படி போரில் சண்டை போடுவது.இன்னொன்று எப்படி சமையல் செய்வது.பிரபாகரன் நன்றாக சமையல் செய்வார்.சென்னையில் இருந்த வீட்டில் சமையல் செய்வதை தான் காண்கிறீர்கள்.

"எங்கள் பிள்ளைகள் புட்டு, இடியாப்பம்,மீன், கோழி,மரக் கறி என்று வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.ஆனால் போர் காலத்தில் ருசியான சாப்பாட்டுக்கு ஏங்க கூடாது.பருப்பு சாதமோ,ரொட்டியோ சாப்பிட்டுக் கொண்டு தான் போராட வேண்டும்.அதற்க்கு நான் முதலில் வீரர்களுக்கு சமையல் செய்யக் கற்றுக் கொடுப்பேன்.நாமே சமையல் செய்து சாப்பிடும் போது நன்றாக இல்லை என்றாலும் மனம் ஏற்றுக் கொள்ளும்.தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாம் சமைக்கும் சாப்பாடு பழகி போய்விடும்.விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் விருந்து சாப்பாட்டுக்கு மனம் ஏங்காது" ------என்பார் பிரபாகரன்.உண்மை தானே.....!

Saturday 5 May 2012

விடுதலைப் புலிகள் 36 ஆம் ஆண்டு தொடக்க நாள்......!

                                                          தன் மக்கள் படும் துன்பத்தை கண்டு கோபமடைகிறான் அந்த இளைஞன்."அமைதியாக போராடி நாம் என்ன கண்டோம், இனி நாமும் சிங்களருக்கு புரியும் பாசையில் பேசினால் தான் சரி" என்று ஆயுதத்தை எடுக்க முடிவு செய்கிறான் அந்த இளைஞன்.17 வயதில் வீட்டை பிரிந்து "புதிய தமிழ்ப் புலிகள்" என்ற அமைப்பை ஆரம்பிக்கிறான்.தன் அக்காவின் திருமணத்தின் போது தனக்கு அணிவித்த மோதிரத்தை விற்று துப்பாக்கி வாங்குகிறான்.

                                                         "ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஈழத்தை பிடித்து விட சிறு பிள்ளைகள் கிளம்பி விட்டனர்" என்று பலர் கேலி பேசுகின்றனர்.மனம் தளராது தொடர்ந்து போராடி ஒரு நாட்டிற்கென்று இருக்க வேண்டிய கால்லுரிகள்,பள்ளிகள்,அரசியல் துரைகள் மற்றும் பாதுகாப்புக்காக தரைப்படை,வான்படை,கப்பல் படை மற்றும் எந்த நாட்டிலும் இல்லாத தற்கொலைப்படை அமைப்பையும் உருவாக்கிய போது கேலி பேசியவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள்.

                                                          அந்த இளைஞன் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்.மே 5 1976 ஆம் ஆண்டு புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பை "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று மாற்றினார்.இன்று தமிழ் மக்களை தலை நிமிர செய்த விடுதலைப் புலிகள் அமைப்பின் 36 ஆம் ஆண்டு தொடக்க நாள்....!

Thursday 26 April 2012

கல்விமுறையில் மாற்றம் தேவை.....!

பள்ளியில் 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் படித்து வந்த 3 மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துள்ளனர்.நிறைய பாடங்களில் தோல்வி அடைந்ததால் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் தான் காரணம்.

விடாமுயற்சி,தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் எப்படி போராடுவது என்று சொல்லிக் கொடுப்பதே உண்மையான கல்வியாகும்.

ஏன் நீங்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை என்று கேட்டேன் 'அது எங்கள் SYLLABASIL இல்லையே" என்ற பதில் வந்தது.என்னத்த சொல்றது.....?

Wednesday 22 February 2012

வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு......!

                                               "23 -ஆம் புலிகேசி" படத்தில் மன்னரை புகழ்ந்து பேசும் போது "வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு" என்று ஒரு வசனம் வரும்.தன் தலைவராக நினைக்கும் கருணாநிதி அவர்களுக்கு இந்த வசனம் பொருந்தும் என்று வடிவேலு கூட யோசித்திருக்க மாட்டார்.

                                                மக்கள் ஈழம் பற்றி எறிந்த போதும்,விலைவாசியால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது வாரம் ஏலு நாட்களும் தன்னை மற்றவர்கள் புகழ்வதை கேட்டுக் கொண்டிருந்தார்.ஆட்சி மாறிய பின்பும் காட்சிகள் மாறவில்லை.நாளை பிறந்த நாள் கொண்டாடும் முதல்வருக்கு உடன் பிறப்புகளால் சென்னை முழுதும் "நாளைய பாரதமே" என்று பதாகைகளும்,சுவரொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.இப்படி வீண் வேலைகளில் ஈடுபடுவதை விட மக்கள் நலனில் அக்கறைக் காட்டினால் நல்லது.

இல்லையென்றால் "வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு"........!

Tuesday 21 February 2012

சுவர் விளம்பரங்களால் மட்டுமே புரட்சி செய்திட முடியுமா என்ன....?






தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் மாதத்தில்(இன்னும்
ஆறு மாதம் கழித்து),ஆனால் இப்போதே "அடங்க மறுத்த சுனாமியே" வாழ்க பல்லாண்டு என்று திருமாவளவன் கோபமா முறைத்துக் கொண்டிருக்கும் சுவர் விளம்பரங்கள் சென்னையில் இப்போதே வைத்து விட்டனர்.பின்புறத்தில் மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய போராடிய பெரியார், பிரபாகரன். அம்பேத்கர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுவர் விளம்பரங்களால் மட்டுமே புரட்சி செய்திட முடியுமா என்ன....?

Monday 20 February 2012

தமிழீழ தேசியத் தாய்க்கு வீரவணக்கங்கள்......



தமிழனத்தை தலைநிமிர செய்த தமிழீழ தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரனை ஈன்ற பார்வதி அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று.

தமிழீழ தேசியத் தாய்க்கு வீரவணக்கங்கள்......

Tuesday 17 January 2012

கண்டதை சொல்கிறேன்......

                                                                               
                                        நண்பர்களுக்கும்,சொந்தங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.நீண்ட நாட்களாக நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்க்கு நமக்கென்று ஒரு வலைத்தளம் இருந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. நண்பனின் உதவியுடன் வலைத்தளத்தை உருவாக்கியாச்சு.

                                       "கண்டதை சொல்கிறேன்" இரு பொருள் தரும் சிலேடை என்பார்களே அது போல் இதை பார்க்கலாம். அரசியல், சமூகம், நகைச்சுவை,வரலாறு,விவசாயம்,வன்முறை மற்றும் நாம் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி பேசுவோம்.அல்லது நான் கண்டதை,படித்ததை பற்றி பேசுவதாகவும் வைத்துக் கொள்ளலாம்.தைத் திருநாளில் ஆரம்பிப்பதை பெருமையாக கருதுகிறேன்.என்னுடைய வளர்ச்சியில் நண்பர்கள் மற்றும் சொந்தங்களின் பங்கு அதிகம்.உங்கள் ஆதரவு
என்றும் எனக்கு தேவை.

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...