Thursday, 25 May 2017

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

"பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தில் வெளிநாட்டினருக்கான விசாவில் அமெரிக்காவும் ,ஆஸ்திரேலியாவும் திருத்தம் கொண்டு வந்துள்ளன.

தேசங்கள் பிற நாட்டினருக்கு தங்கள் கதவை சாத்திக்கொண்டிருக்கின்றன. தமிழர்களின் வீடு மட்டும் திறந்த வீடாக இருக்க வேண்டுமென்றால் எப்படி...?

கதவை சாத்தவில்லையென்றால் திருடிக்கொண்டு போய்விடுவார்கள்...!

Wednesday, 24 May 2017

இணையுடன் சண்டை...

இணையத்தில்
சண்டை போடுவது
பொம்மை சண்டை
போல...
அடிப்பவருக்குத் தான்
கை வலிக்கும்..
எவ்வளவு அடி
வாங்கினாலும்
பொம்மைப் போல்
எதிராளிக்கும்
உடல் வலிக்காது....
மனம் 
வலிக்க 
வாய்ப்புள்ளது...

Tuesday, 23 May 2017

இளம்பிறை..தன்னை விட

அழகான 
இளம்பிறையை
கண்ட 
பூச்செடி
தனக்கான
முகப்பு படமாக
வைத்துக்
கொண்டது

"அடுத்தவர் மொழியை வளர்க்க அற்புத விளக்கொன்றும் எங்களிடமில்லை..."

தரணி போற்றும்
தமிழ் மொழியின் 
பெருமை கண்டு
தமிழ் மொழி மீது
பொறாமை கொண்டு
தன் மொழியை
தமிழரே வளர்க்க
வேண்டுமென்று
அடம்பிடிக்கிறான்
இந்திக்காரன்.

அவரவர் மொழியை
அவரவரே வளர்க்க
வேண்டும்.

அடுத்தவர் மொழியை
வளர்க்க
அற்புத விளக்கொன்றும்
எங்களிடமில்லை...


கடிக்க
முடியாத நாய்
குரைத்து விட்டு
சமாதானமடைவது
போல...

பெண் 
கல்வி பெறுவதை
பணிக்கு செல்வதை
பணம் ஈட்டுவதை
பதவி பெறுவதை
தனக்கு பிடித்தமான
பொருள் சேர்ப்பதை
வாழ்வில் முன்னேறுவதை

தடுக்க முடியாத
இயலாமையில்
இப்படியான பதிவைப்
போட்டு சமாதானமடைந்து
கலைந்து செல்கிறார்கள்
சிலர்...

இந்தியாவை எதிர்ப்பதிலிருந்தே தமிழ்த் தேசிய அரசியல் எழுகிறது.....!

நீதி கிடைப்பது ஒரு பக்கம். ஆனால் ஈழப்படுகொலையில் முறையான விசாரணை கூட ஆரம்பிக்கப்படவே இல்லை. இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு பக்கபலமாக இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக இந்திய அரசே செயல்பட்டு வருகிறது.
புராணம் ,ஆன்மிகம் என்று மக்களிடம் கதை விடும் இந்திய அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு முட்டு கொடுப்பது ஏன் என்று , "இந்தியர்" என்று தம்மை நினைத்துக்கொள்ளும் தமிழர்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
2009 ஈழப் படுகொலை தமிழ்நாட்டு தமிழர்களாகிய நமக்கும் ஓர் படிப்பினை. இந்தியா நமக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்காது என்று உணர்த்தப்பட்ட தருணம். இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததுமல்லாமல் , இலங்கைக்கு ஆயுதமும் , ராடார் கருவிகளும் வழங்கி இனப்படுகொலைக்கு இந்தியா துணை நின்றது.
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஓரணியில் நின்று போர் நிறுத்தத்திற்காக இந்தியாவிடம் வேண்டினர். கண்முன்னே ஈழம் அழிக்கப்பட்டது.
போருக்கு பின்னரான காலத்திலும் இலங்கைக்கு ஆயுத பயிற்சி அளிப்பது , போர் கப்பலை பரிசளிப்பது என்று இந்திய அரசு தனது உதவிகளை செய்து கொண்டு தான் உள்ளது.
வர்த்தக நலன்களுக்காக சண்டையில் ஈழத் தமிழரை அழித்தது , தமிழ்நாட்டு மீனவர்களை அழித்து , காவிரி உரிமை பறிப்பு , நீராதாரங்கள் அழிப்பு , கூடங்குளம் , நியூட்ரினோ , நெடுவாசல் என்று பலி கேட்டு நிற்கிறது.
தமிழர் விரோத போக்கை தம் கொள்கையாக வைத்திற்கும் இந்தியாவை எப்படி நம்புவது...?
இந்தியாவை எதிர்ப்பதிலிருந்தே தமிழ்த் தேசிய அரசியல் எழுகிறது.....!

பிரிவு நிச்சயம்...

சபிக்கப்பட்ட வாழ்க்கைக்குள் கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிர்பந்தம் உறவுகளைப் போல் தேசங்களுக்குமில்லை.
வேதனை மிச்சமென்றால் பிரிவு நிச்சயம்...
எங்கேயும் , எப்போதும் போராடிக் கொண்டிருந்தால் அவருக்கு *தமிழர்* என்று பெயர்... 

நாம் அடிமையாக வாழ்கிறோம் இந்தியாவில்...!

கனடாவில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் புலிக் கொடி , ஈழ வரைபடம் உள்ளிட்ட அடையாளங்களோடு மக்கள் பங்கேற்றுள்ளார்கள்.
ஏழு கோடி வாழும் தமிழ்நாட்டிலோ ஒரு மெழுகுவர்த்தி ஏற்ற தடை செய்கிறார்கள்.
நாம் அடிமையாக வாழ்கிறோம் இந்தியாவில்...!

இந்தியாவில் இதெல்லாம் உள்ளதா..?

ஒரு கூட்டாட்சியில் குறைந்தபட்ச சனநாயகம் என்பது அனைத்து மொழிகளும் சமமாக கருதப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் , அவர்களின் அடையாளங்களும் சமமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்.
"இந்தியாவில் இதெல்லாம் உள்ளதா..?" என்று
"இந்தியர்" என்று பெருமையடித்துக் கொள்வோர் சற்றே சிந்திக்க....

ஆரியத்துவத்தை எதிர்ப்போம்....!

நமக்கு ராமர் என்றால் ராமர் தான்..
டில்லி என்றால் டில்லி தான்..
கீதை என்றால் கீதை தான்...
அவர்களின் அடையாளங்களில் அவர்கள். மாற்ற நாம் யார்..?
ஆனால் அவர்களுக்கோ
நம் "தஞ்சை பெருவுடையார் கோவில்" -- பிரகதீஸ்வரர் கோவில்"
மயிலாடுதுறை என்ற ஊர் மாயவரம்
"திரு" என்பது "ஸ்ரீ"
தமிழ் மொழியோ அவர்களுக்கு நீஷ பாஷை...
அவர்களின் இதிகாசங்களில் தமிழர்களோ அவர்களுக்கு சூத்திரர்கள் அல்லது அரக்கர்கள்.
ஆரியர் ராமன் அழகன். தமிழர் இராவணன் அரக்கன்...
இப்படி நம் அடையாளங்களை மாற்றி நம்மையும் மாற்றிய "ஆரியத்துவத்தை" எதிர்ப்பதும் , மாற்றிய அடையாளங்களை தமிழ்ப்படுத்துவதும் நம் கடமை...

Thursday, 9 March 2017

இனம் காக்க தாயகமும் , மொழியும் முக்கியம்...

"நான் தேசம் , மொழி , என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று சொல்வதற்கும்,  ஒரு மொழி வேண்டும்....
அதை சுதந்திரமாக நின்று பேச ஒரு தேசம் வேண்டும்.... "
என்பதை நினைவில் கொள்க.
வாழுமிடமெல்லாம் தாயகமாகாது. பேசும் மொழியெல்லாம் தாய் மொழியாகாது.
இனம் வாழ , தாயகமும் , தாய்மொழியும் முக்கியமானது. இழந்தால் அகதியாவோம்.....!

Friday, 6 January 2017

"ஏ.ஆர்.ரகுமான் பெற்ற உயர் விருது"

"அப்பொழுது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற தமிழ் படம் வெளியாகியது, அந்த படத்தில் "கண்ணா மூச்சி ஏனடா" என்ற பாடலை எப்பொழுது வானொலியில் ஒலிபரப்புவார்கள் என்று வானொலி முன்னே காத்திருப்பார்  பிரபாகரன்.

அடிக்கடி அந்த பாடலை கேட்டுவிட்டு "பின்னிபுட்டான்யா நம்ம பையன்" என்று ரகுமானை பற்றி சகபோரளிகளிடம் பெருமையாக பேசிகொள்வர்.

அந்த பாடல் ஒலிபரப்ப ஆரம்பித்தவுடன் எந்த வேலை இருந்தாலும் விட்டுவிட்டு உடனே வானொலியின் முன்னே உட்கார்ந்துகொள்வார், அவர் மிகவும் ரசிக்கும் பாடல் அது"

போர் சூழலில் இருந்த போதும்  ரகுமானுக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை நினைத்து தலைவர் பெருமை அடைந்திருப்பார்.

லைவரின் வாழ்த்து ஏ.ஆர்.ரகுமான்  பெற்ற உயர் விருது தானே....

தமிழினத்துக்கு பெருமை சேர்க்கும் ஏ.ஆர்.இரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!

"கிழக்கு சீமையிலே" படத்திற்கு ஏ.ஆர்.இரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

"கிராமத்து மக்களின் கலாச்சார கதையை மையமாக எடுக்கும் பாரதிராஜா படத்திற்கு இஸ்லாமியரான ஏ.ஆர் இரகுமான் எப்படி சரி வருவார் ...?" என்று பேசியவர்கள் உண்டு.

கிழக்கு சீமையிலே படத்தின் பாடல்கள் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றன. தன்னுடைய திறமைக்கு மதம் தடையாகாது என்பதை ஏ.ஆர்.இரகுமான் நிறுபித்தார்.

இன்றைக்கும் தேனி பக்க குடும்ப விழாக்களில் தாய் மாமன் சீர் கொண்டு வரும் போது "தாய் மாமன் சீர் கொண்டு வராண்டி" என்ற கிழக்கு சீமை படத்தின் பாடல் கட்டாயம் இடம் பெறும்.

தமிழினத்துக்கு பெருமை சேர்க்கும் ஏ.ஆர்.இரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...