Friday, 22 July 2016

காஷ்மீர் பிரச்சினையில் நம் பார்வை சரியா....?

காஷ்மீர் எங்க இருக்கு...?

ஈரோடு பக்கம் இல்ல தூத்துக்குடி பக்கம் இருப்பது போலவே சில நண்பர்கள் நினைத்துக் கொண்டு " காஷ்மீர் இந்தியாவின் அங்கம் " என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட இந்திய தேசபக்தியின் வெளிப்பாடு தானே தவிர உண்மை அல்ல.

1947--ல் இந்தியாவை உருவாக்கும் போது. பல தேசங்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்ற காரணத்திற்காக இந்தியாவோடு இணைந்தன. அரசு கட்டி ஆண்ட தமிழர்கள் கூட பிரிட்டிஷ் எதிர்ப்பின் காரணமாகவே இணைந்தனர். இந்தியாவோடு இணைவதற்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் இருந்தது.

நாகாலாந்து , மணிப்பூர் உட்பட பல தேசங்கள் துப்பாக்கிகளை காட்டி மிரட்டி இணைக்கப்பட்டன.

சில தேசங்கள் ஆசைவார்த்திக் காட்டி இணைக்கப்பட்டன. "ஐநா சபையிடம் பேசி தனி நாட்டிற்கான  பொதுவாக்கெடுப்பு நடத்துகிறோம் " என்ற ஆசைவார்த்தையால் இணைக்கப்பட்ட தேசம் தான் காஷ்மீர்.

இன்று வரை இந்தியா காஷ்மீர் மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. மாறாக அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது , அபகரிக்க துடிக்கிறது. பாகிஸ்தானும் மறுமுனையில் இதையே செய்கிறது.

இரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் அம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வோம். அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்......!

Thursday, 21 July 2016

கேரள கம்மயூனிஸ்ட்களின் தேசபக்தி...!

குளச்சல் துறைமுகம் விரிவாக்கப்பட்டால் பன்னாட்டு கப்பல்கள் , கொச்சித் துறைமுகம் செல்லாமல் குளச்சல் வழியாக தமிழர் பெருங்கடலில் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

இதனால் , விழிஞ்சம் போன்ற கேரளத் துறைமுகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமென்று கேரள கம்யூனிஸ்ட் அரசு கருதுகிறது.

தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீரும் , பாசனநீரும் தரும் முலலைப் பெரியாறு அணையை ஒரு பக்கம் உடைக்க வேண்டுமென்று கொக்கரிக்கும் மலையாளிகள்,

மறுபுறம் தமிழர்கள் குளைச்சல் துறைமுகம் கட்டக் கூடாது என்கிறார்கள். என்னே மார்சிஸ்ட்களின் சோசலிசம் ! என்னே அவர்களின் இந்திய தேசியம் ! சர்வதேசியம !.

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் , இனத் தற்காப்புணர்வும் , தற்காப்பு ஆற்றலும் பெற வேண்டும்.....! "
------"தமிழர் கண்ணோட்டம்" இதழில்.

Tuesday, 19 July 2016

காஷ்மீர் தேசத்தின் சிறப்பு...

காஷ்மீர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உண்டு. வெளி மாநிலத்தவர்கள் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது என்ற 370--வது சட்டப்பிரிவு தான் அந்த பாதுகாப்பு.

மார்வாடிகள் , மலையாளிகள் பன்னாட்டு , வெளிநாட்டு முதலாளிகளால் அங்கு நிலம் வாங்க முடியாது. ஆதலால் காஷ்மீர் மக்களின் நிலம் கொள்ளையடிக்கப்படாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் இத்தகைய சிறப்பு சட்டப்பிரிவு இல்லையென்பதால் தான் , தமிழ்நாட்டு மக்களின் நிலம் , வேலைவாய்ப்பு பிற மாநில மக்களால் வேட்டையாடப்படுகிறது...

காஷ்மீர் தேசத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டிற்கும் 370--வது சட்டப்பிரிவு தேவை என்பதை உணர்வோம். தாயகம் காப்போம்.....!

Tuesday, 12 July 2016

போராளிகளின் மரணமும்----சிங்களத்தின் நயவஞ்சகமும்.


போரின் இறுதி கட்டத்தில் பல போராளிகளை இலங்கை அரசாங்கம் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். அப்படி கைது செய்யப்பட்ட பலரின் நிலை இன்றும் தெரியவில்லை.

இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறியவர்கள் ஆள்காட்டியாக மாறி போராளிகளை காட்டிக் கொடுத்தார்கள்.

" போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி புது வாழ்வு அளிக்கிறோம் " என்று இலங்கை அரசு நாடகத்தை அரங்கேற்றியது. அதன்படி சில போராளிகளை விடுதலை செய்தது. அப்படி விடுதலை ஆன தமிழினி அக்கா உள்ளிட்ட போராளிகள் , சிறுது நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.

மனித உரிமை ஆர்வலர்களின் கண்காணிப்பால் , முன்பு போல் துப்பாக்கியால் கொல்ல முடியாத சிங்கள அரசு , நயவஞ்சகமாக போராளிகளின் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியை செலுத்திக் கொல்கிறது.
தமிழர் மீதான இன அழிப்பு தொடர்கிறது.

ஆயுதம் ஏதும் இல்லாத போதும் , தமிழ்ப் போராளிகளை கண்டு சிங்களம் அச்சம் கொள்கிறது.

எப்போதும் போல் இப்போதும் எங்கள் போராளிகள் வீர்களாகவே சாகிறார்கள். நீ கோழையாகவே வாழ்கிறாய்.....!
 
http://senpakam.org/49284/

Sunday, 10 July 2016

பீகாரின் கல்வித்தரமும்--பாதிப்படையும் தமிழர்களும்....

பீகாரில் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலே முதல் மதிப்பெண் பெற்றார். மாநிலமே புகழ்ந்தது.

வழக்கம் போல செய்தியாளர்கள் பேட்டியெடுக்க சென்றனர். அப்போது தான் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கல்வித் தரத்தை கண்டு உலகமே சிரித்தது.

ஒரு செய்தியாளர் பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தின் மதிப்பெண் குறித்து கேள்வியெழுப்பிய போது "பொலிடிக்கல் சயின்ஸ் என்றால் சமையற் கலை படிப்பு தானே" என்றார்.  மொத்தக் கூட்டமும் வாயடைத்து நின்றது.

பின்பு தான் தெரிந்தது. ஆள் மாறாட்டாம் செய்து தேர்வை எழுதியிருக்கிறார் என்று. விசாரணை நடத்தப்பட்டு இப்போது அந்த மாணவி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதே போன்று முறைகேட்டில் ஈடுபட்டதாக சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த முறைகேடு குறித்து அந்த மாணவி கூறியது இன்னும் அதிர்ச்சியை தந்தது.

"நான் தேர்ச்சி பெற்றால் போதும் என்று தான் அப்பாவிடம் கூறினேன். அவரோ என்னை முதலிடம் பிடிக்க செய்யுமளவுக்கு சென்று விட்டார்".

ஆக பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் கல்வித்தரத்தின் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...?

லாலு பிரசாத் இந்திய அமைச்சராக இருந்த காலம் தொட்டு இன்று வரை ஆயிரக்கணக்கான பீகாரிகள் தமிழ்நாட்டில் தொடர்வண்டி உள்ளிட்ட துறைகளில் நுழைந்துள்ளனர்.

இவர்களின் தரம் கேள்விக்குட்படுத்தப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேலைவாய்பில்லாமல் இருக்கும் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டம்.

அவர்களின ஊரில் எது வேண்டுமானாலும் செய்யட்டும். அங்கையே வேலைவாய்ப்பை பெற்று வாழட்டும்.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு பணிகளில் 90 சதவிகத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் இக்கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. தோழர்கள் துணை நிற்க வேண்டுகிறோம்....!

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...