Tuesday 23 May 2017

இந்தியாவை எதிர்ப்பதிலிருந்தே தமிழ்த் தேசிய அரசியல் எழுகிறது.....!

நீதி கிடைப்பது ஒரு பக்கம். ஆனால் ஈழப்படுகொலையில் முறையான விசாரணை கூட ஆரம்பிக்கப்படவே இல்லை. இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு பக்கபலமாக இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக இந்திய அரசே செயல்பட்டு வருகிறது.
புராணம் ,ஆன்மிகம் என்று மக்களிடம் கதை விடும் இந்திய அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு முட்டு கொடுப்பது ஏன் என்று , "இந்தியர்" என்று தம்மை நினைத்துக்கொள்ளும் தமிழர்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
2009 ஈழப் படுகொலை தமிழ்நாட்டு தமிழர்களாகிய நமக்கும் ஓர் படிப்பினை. இந்தியா நமக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்காது என்று உணர்த்தப்பட்ட தருணம். இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததுமல்லாமல் , இலங்கைக்கு ஆயுதமும் , ராடார் கருவிகளும் வழங்கி இனப்படுகொலைக்கு இந்தியா துணை நின்றது.
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஓரணியில் நின்று போர் நிறுத்தத்திற்காக இந்தியாவிடம் வேண்டினர். கண்முன்னே ஈழம் அழிக்கப்பட்டது.
போருக்கு பின்னரான காலத்திலும் இலங்கைக்கு ஆயுத பயிற்சி அளிப்பது , போர் கப்பலை பரிசளிப்பது என்று இந்திய அரசு தனது உதவிகளை செய்து கொண்டு தான் உள்ளது.
வர்த்தக நலன்களுக்காக சண்டையில் ஈழத் தமிழரை அழித்தது , தமிழ்நாட்டு மீனவர்களை அழித்து , காவிரி உரிமை பறிப்பு , நீராதாரங்கள் அழிப்பு , கூடங்குளம் , நியூட்ரினோ , நெடுவாசல் என்று பலி கேட்டு நிற்கிறது.
தமிழர் விரோத போக்கை தம் கொள்கையாக வைத்திற்கும் இந்தியாவை எப்படி நம்புவது...?
இந்தியாவை எதிர்ப்பதிலிருந்தே தமிழ்த் தேசிய அரசியல் எழுகிறது.....!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...