Thursday 29 September 2016

ஆர்.எஸ்.எஸும் அப்பாவிகளும்....

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி , உமாபாரதி போன்றோர் அதை இரசித்துக்கொண்டும் , மகிழ்ச்சியில் இனிப்புகளை சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர்.

கரசேவகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மசூதியை இடிக்கும் பணியில் இருந்தனர்.

பொதுவாகவே பார்ப்பனர்கள் எந்த சண்டையிலும் முன்னுக்கு நிற்பதில்லை. அதே நேரத்தில் தாம் நினைத்ததை பிறரை தூண்டி நிறைவேற்றி விடுவார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டது தான் "பாபர் மசூதி இடிப்பு" , பின்பு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளும்.

அதன்படியே அத்வானி வேடிக்கை பார்க்க , இந்து மத வெறியேற்றப்பட்ட அப்பாவி பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் மசூதியை இடித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களை  தான் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவது தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின் கொள்கை.

அன்றைய காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனை செல்பவர்களாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். அரசர்களை விட சிறப்பாகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்கு சேவகம் செய்யவே குறிப்பிட்ட மக்களை பயன்படுத்தினர். " சூத்திரர்கள் இழிதொழில் செய்யவும் , பார்ப்பனர்களுக்கும் , அரசனுக்கும் சேவகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் " என்று வேதம் சொல்வதாக நம்ப வைக்கப்பட்டார்கள்.

அன்றைய காலம் போல் இப்போது மன்னராட்சி இல்லை, தீண்டாமை என்பது காலத்திற்கு காலம் மாற்றம் பெறுகிறது. அதன் நவீன வடிவமாக தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்க்க வேண்டும்.

பார்பனர்களுக்காக சண்டை போட , மசூதிகளை இடிக்க , மத சண்டைகளை உருவாக்க ஆள் தேவைப்படுகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் , இந்து முன்னணி போன்றவைகள். இவர்களுக்கான அரசியல் கட்சி பா.ச.க.

திருவிழாக்கள் நடத்துவது , கபடி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் மக்களை திரட்டி பயிற்சி கொடுப்பது , இந்து மத பெருமைகள் , வேதகால பெருமைகள் பேசி மூளைச்சலவை செய்து வன்முறைக்கு தயார்ப்படுத்துவது தான் இவர்களின் வேலையாக உள்ளது.

அப்படிப்பட்ட வன்முறை தான் கோவையில் நடந்தது. வன்முறை மூலம் "இந்து மக்களின் பிரதிநிதி" என்ற பிம்பம் கிடைக்கிறது. அதை தேர்தலில் அறுவடை செய்ய நினைக்கிறார்கள்.

இதற்கு நாம் இடம் அளித்து விடக்கூடாது. இது திருவள்ளுவர் பிறந்த மண் , வள்ளலார் பிறந்த மண் , நம்முடைய வழிபாட்டு முறைகள் வேறு , நம்முடைய தமிழ் மொழியை இவர்கள் ஏற்கமாட்டார்கள்.

சமற்கிருத பார்ப்பன அடிமைகளாக நாம் இருக்க கூடாது. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆரிய பிரச்சரத்தை தமிழ் கொண்டும் , தமிழர் வழிபாடு கொண்டும் எதிர்த்திடுவோம்....!

Tuesday 27 September 2016

தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....

அரசாங்கம் முதலில் தனது தவறை ஒத்துக்  கொள்ள வேண்டும். தங்களின் தவறை கௌரவ குறைச்சலாக நினைத்து , தவறை மூடி மறைக்க ஆரம்பிக்கும் போதே பிரச்சனைகள் அதிகமாகின்றன.

"டெங்கு காய்ச்சல் பரவுவவது உண்மை தான். இனி விழிப்போடிருந்து மக்களின் சுகாதாரத்தை காப்போம்" என்று அரசாங்கம் சொல்வதில் தவறேதுமில்லை.

உண்மையில் உண்மையை ஒத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட அரசாங்கம் தான் இங்கு தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கமோ "மர்ம காய்ச்சல் பரவுகிறது" என்று பொத்தாம் பொதுவாக சொல்லி தமது தவறை மூடி மறைக்கிறது.

" டெங்கு காய்ச்சல் அதிகமுள்ள மாநிலம் என்ற அவப்பெயர் வந்து விடுமோ " என்ற போலி கெரளவத்திற்காக உண்மையை மறைக்கலாமா...?

தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....

தமிழ் மொழியில் அறிவியல் :

ஆங்கிலம் பிறக்காத காலத்திலேயே உலகம் வியக்கும் வகையில் - ஆற்றைத் தடுத்துக் கல்லணை கட்டியிருக்கிறோம்,

"ஆனால், ஆங்கிலத்தில் தான் எல்லாம் இருக்கிறது, நம் மொழியில் எதுவுமில்லை" என்று புரிந்து கொள்கிறார்கள்.

"ரசமட்டம்" என்று தமிழில் சொன்னால் அவர் கொத்தனார். ஆனால் "மெர்குரி லெவல்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் அவன் இன்ஜினியர்.

"வேப்பங்குச்சி"என்று சொன்னால் அவன் பட்டிக்காட்டான். ஆனால் "நீம் டூத் பேஸ்ட்" என்று சொன்னால் அவன் நாகரிகத்தவன்.

"இட்லி பானை" என்று சொன்னால் அவன் கிராமத்தான். ஆனால் "பிரசர் குக்கர்" என்று சொன்னால் அவன் நாகரிகத்தவன். இவ்வாறு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

"ஆடிப்பட்டம் தேடி விதை "என்பது தமிழில் பழமொழி. ஆனால், அதிலொரு அறிவியல் உண்மை இருக்கிறது.

இதை ஏன் நாம் இழக்க வேண்டும்..? இந்த அறிவியலை இந்த உலக சமூகம் ஏன் இழக்க வேண்டும்...?
...........................................
தோழர் கி.வெங்கட்ராமன்,தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...